வரம் கேட்கிறேன் இறைவா
புரிந்துணரும் அறிவுத்தந்தாய்
புரியாமல் புலம்புகிறேன்
தெரிந்துணரும் புலமைத்தந்தாய்
தெரியாமல் தவிக்கிறேன்
பார்த்துணரும் பண்புதந்தாய்
பார்க்காமல் மறைகிறேன்
பேச்சாற்றல் தந்தாய்
பைத்தியமாகிவிட்டேன்
எழுத்தாற்றல் தந்தாய்
ஞான கிருக்கனாகிவிட்டேன்
நான் தான் நீ என்று ஊதி
உயிர்க்கொடுத்தாய்
நீயாக நான் இல்லை
நானாகவும் நானில்லை
வல்லவனாக நான்மாற வேண்டாம்
நல்லவனாக மட்டும் வாழும் வரம் தருவாய்
உயிர் எனைத்துறந்து
உடல் மண்ணில் விழும் வரை - என
வரம் கேட்கிறேன் இறைவா
தருவாயா உம்பதம் பணிகின்றேன்