காதல் ஒரு தன்னம்பிக்கை

என் வசந்தகால பூங்காவில்
வாடாமல் சிரித்திருக்கும்
தாமரையே !

உன் பனிவிழும்
பார்வையில்
பூவாய் போனது
மனம்!

நினைவுகளை
சுமந்து அழியும்
நானோ பிணம்!

துளித்துளியாய்
விழுந்த காதல் வெள்ளம்
இதயத்தை இடம்
பெயர்த்தது!

காதல் வெள்ளத்தை
உன் பார்வைதானே
வரவேற்றது!

சிப்பியை பிளந்து
முத்தாய் வைத்தேன்
உள்ளத்தை!

நெருஞ்சி முள்ளின்
முந்தய வடிவம் தான்
காதல் பூ என்றாள்!

முள் இல்லை
முட்கள் மேல் பூத்த பூ
என்றேன்!

தெரியும்
உன் இமை அசைவுதான்
என் இதயத்தை இயக்குகிறது!
என்றாள்!

பிறகென்ன?
வானவில்லில் ஏறி
வலம் வருவோம் என்றேன் !

இல்லை !
நீ நிலம் ஊன்றா
ஆலமர விழுது
என்றாள்!

புரியவில்லை என்றேன்!

பூங்கொடி படர
வேண்டுமென்றால்
உனக்கு பிடிமானம்
வேண்டுமென்றாள்!

காதல் போதையில்
இருந்து விட்டேன் !

என் இதயத்தோடு
வாழ்க்கையையும்
சலவை செய்யச்
சொன்னாய் !

நன்றி வருகிறேன்!

கால் செருப்பு
தேயுமுன்னே
கைநிறைய சம்பளத்தோடு
வருகிறேன்!

காதல்
ஒரு
தன்னம்பிக்கை!
* * *

எழுதியவர் : கோடீஸ்வரன் (10-Nov-13, 8:15 am)
பார்வை : 152

மேலே