பதுமை

விழி இருந்தும் அழ முடியாத

கற்ச் சிலை ஆனேன்...

என்னுள் இருக்கும் காயங்களின்

வழி தாங்காமல்,

கல்லின் ஈரம் கண்ணீராய்க் கரைய,

வாழ்வின் எல்லை

எதுவென்று அறியாமல்

என் தேடலின் தொடக்கம், உன்னைக் கண்டதும்

முடிவடைவதை உணர்ந்தேன்...

நீ பிரிந்து செல்லும் ஓவ்வொரு நொடியிலும், உன் மென் பனி வார்த்தைகள்

யாவும்

ரணமாய் வாட்ட,

அறிவின் சொல்லை மனமது வெறுக்க,

போராட்டத்தின்

உச்சத்தில் என் இதயம் ...

கனவுகள் எல்லாம் கண்ணீராய்க் கரைய,

கவிதையின் கை கொண்டு

என் உணர்வை நான் எழுத,

இன்னும் துடித்துக்கொண்டு இருக்கிறது என் இதயம்...

எனக்காக அல்ல,

என்னுள் இருக்கும் உனக்காக...

சூரியனாய் சுட்டேரிப்பதும் நீயே

வெண்ணிலவாய் என்னைத் தொட்டணைப்பதும் நீயே....

யாதுமாகி என்னை நீ வாட்டினாலும்

உன் நினைவுகளின் சுவாசம் ஒன்றில்

உயிர் வாழும் பதுமை நானே...

எழுதியவர் : அஸ்லூனா (10-Nov-13, 9:36 am)
Tanglish : pathumai
பார்வை : 128

மேலே