நம் வாழ்வின் தொடக்கம் எப்போது

வடக்கே நீ
தெற்கே நான்
கிழக்கே உதித்து
மேற்கே மறையும்
சூரியன் போல்
மத்தியில் நம் ஆசைகள்,

நொடிகள் நகர திணறுகிறது
நாட்கள் செல்ல மறுக்கிறது
பணியிட மாற்றம் கிடைக்காமல்
பத்திய வாழ்க்கையிது நிதம்
பந்தி விரிக்கிறது.

சீர்வரிசைகள் அட்டைபெட்டிகளில்
அடங்கியே அடைகாக்கிறது.
புது இடம் தேடியே புழுக்கத்தில்
வாழ்கிறது.

ஞாயிற்று கிழமையை
எண்ணியே
ஆறு நாட்களும்
யுகமாய் கடக்கிறது...

உன் சிரித்த முகம் பாராமலே
என் முகவரிகள் மறந்து போகிறது...

உன் மொழி கேளாமலே
என் மௌனங்கள் நீள்கிறது.....

உன் விரல் தீண்டாமலே
என் தேகம் நிதம் தீக்குளிகிறது....

உன் பிரிவை தாங்காமலே
வார்த்தைகள் வந்து விழுகிறது...
மனது நொந்து கனக்கிறது.

நம் வாழ்வின்
தொடக்கம் தான் எப்போது...?


-PRIYAKARTHKEYAN

எழுதியவர் : -PRIYAKARTHKEYAN (10-Nov-13, 2:53 pm)
பார்வை : 135

மேலே