அமைதி
அமைதி !
வேண்டும் என்றால் அழைத்துக்கொள்.
இல்லையென்றால் அடித்துக்கொள்.
அமைதி !
மரங்களின் அமைதி இயற்கை.
நிலங்களின் அமைதி வளமை.
மனிதனின் அமைதி திறமை.
ஆம்! திறமை
அமைதி !
அமைதி காப்பது மனிதனின் அவசியம்.
அது செய்திடுமே நல்ல உறவுகளுக்கு வசியம்.
பிரச்சனை என்றால் அமைதி வேண்டும்
பிறர் நமக்கு சனி என்றாலும் அமைதி வேண்டும்.
பல வண்ண மனங்கள் உலா வரும் பூமியில்
பஞ்சமில்லா அமைதி வேண்டுமாம்
மனிதர்களுக்கு.
புராணங்கள் சொல்கிறது
நேற்று பிறந்த புதல்வர்களும் சொல்கிறார்கள்
மனிதன் என்றால் அமைதி வேண்டும்.
நானும் அமைதி காக்கிறேன்...
பிறர் கேலி செய்தாலும் அமைதி காக்கிறேன்
என்னை போலி என்றாலும் அமைதி காக்கிறேன்.
சிரித்து பேசுகையில் சிரித்துப்பெசுகிறேன்
சீண்டி பார்த்தாலும் சிரித்துதான் பேசிகிறேன்.
பிறருக்கு தேவை என்றால் ஓடி உதவுகிறேன்
எனக்கு தேவை என்றால் நானே ஓடுகிறேன்.
பலனை பார்க்காமல் பாசம் காட்டுகிறேன்
பாசத்தை கேட்டால் வேஷத்தை காண்கிறேன்.
கர்வம் காட்டவில்லை,
தலைக்கணமும் எனக்கு இல்லை.
மேதையானாலும் , கல்வியில் அனாதை ஆனாலும்
அன்பாய் பேசுகிறேன்.
குறிவைத்து தாக்கும் குறுக்கு புத்தியானாலும்
குனிந்துதான் போகிறேன்.
இப்படி பல வண்ணங்களில் அமைதி காத்தாலும்
கடைசியில் நானே பிழை ஆகிறேன்...
பழிக்கும் ஆளாகிறேன்...
அமைதியின் அர்த்தம் புரியாமல் செய்திருக்கிறேன் தவறு அறியாமல்.
அமைதி வேண்டும் ஆவேசமில்லாமல்.
வாதாட வேண்டும் வரம்பு மீறாமல்.
தோழமை என்றாலும், தொப்புள்கொடி என்றாலும்
வாய்மை கொஞ்சம் வேண்டும் வலிகள் வராமல்.
வாய் மூடி வாழ நீ வண்ணத்து பூச்சி அல்ல
வெறியேற்றி பார்தார்கலெனில்,
வெட்டி எறி வாயத்திறந்து.
ஈட்டியிலும் கூர்மை உன் நாவு
அதை கோழையாய் வளைக்காதே
இல்லையெனில் உன் தன்மான சாவு.
அமைதி காத்து அமைதி காத்து
ஒருநாள் மொழிகளையும் மறக்க கூடும்.
தேவை என்றால் சீற்றம் வேண்டும்
சீர மறுத்தால் உன் நாக்கை
அறுக்க வேண்டும்.
அமைதி காத்து மௌனமாய் போவதைவிட
மௌனம் காத்து ஊமையாய் போவது மேல்...