கனவின் சிறுபுள்ளி

தொடப்பட்ட கரைகளின்
வினாக்களிற்கு விடையளிக்க
முடியவில்லை
அதற்குள்ளே இன்னோர் கனா.

ஓடித்திரிகிறேனே நான்
எக்கித்தலைகுனியும்
உன்னைக்காணவே
இல்லை...................

விதியின் பனியிரவாய்
எனை மாற்றிவிட்டு இதய
வழியெல்லாம்
மறைத்துவிட்டாய்...

கனவுகளின் சிறு புள்ளியில்
நான் இறந்து போகிறேன்
உன் நினைவுகள் அங்கேயும்
கரைந்திருப்பதால்....

எழுதியவர் : மௌனஞானி பார்த்திபன் (11-Nov-13, 12:57 am)
பார்வை : 61

மேலே