ஏய் ஏழை தமிழகமே
ஏழைகள் என்றால் சாகத்தான் வேண்டுமா ?
ஏய்...! ஏழை தமிழகமே !
ஏழைகளின் சுமைகளை முதுகில் நான்,
ஏற்றிகொண்டு சுகமாய் இருக்கிறேன்..
நீயும் சுமக்க வேண்டும்..!
சுமைகளோடு என்னையும் சேர்த்து..!
அப்போதுதான் உனக்கு தெரியும் ..?
உன் வலியை விட...
என்னின் வலி என்னவென்று ?
உடலில் ஏற்பட்ட சுமைகளின் காயம் வலிக்கவில்லை..,
என் மனதில் ஏற்பட்ட உன்னின் காயம் வலிக்கிறது..
சொல்லிலும் செயலிலும் வீரனாய் இருந்தும்..!
இப்போ நான் புலம்பிகொண்டிருக்கிறேன்!
சிலர் அரைக்கிறுக்கன் என்கிறார்கள்...
சிலர் ஒன்றும் அறியாத மடையன்,
என்கிறார்கள்.. என்னடா ! உலகம்?
நான் யார் ? என்ன என கெட்கும்,
புத்தியில்லா உலகமிது...! எங்கே ?
சக்தியோடு என்னை சமர்பிக்க.!!
மக்களுக்காக மக்களால்
மக்களே செய்யுமாட்சி..
செத்தொழிந்த காலம்
தேடிப்பார்த்ததில்...
கர்மவீரர் காலத்திலல்லவோ..!
மேடுகள் இன்னும் மேடாகத்தான்.!
பள்ளங்கள் இன்னும் பள்ளமாகத்தான்..!
பரிதவிக்கும் என் மக்கள்
இன்னும் பள்ளத்திற்குள்,
மேடும்...! பள்ளம்..!
சமமாகும் நாள்!!
என் நாளோ ?
இனி நாங்கள் இழப்பதற்கு யொன்றுமில்லை..!
வெற்றியும் தோல்வியும், வெறும் நிகழ்வுகளே...!
எங்களின் மூலதனம் ?
நம்பிக்கையின் முயற்சியில் மட்டுமே..!
நடைபோட்டு கொண்டே இருப்போம்..!
எங்களை தொற்றிக்கொண்ட நிழல்களோடு!!
வெற்றி நடை பயில....
இப்படிக்கு நல்லதோர் தீர்வுக்காக?
சமூகக்காவலன் மதுரை வாசகம்...