வெதும்பல் வனங்கள்

கூவித் திரிஞ்ச குயிலு
கொலையறுந்த படம் புடிச்சி
காடுவிட்டு நாடு போயி
பாரெல்லாம் பரப்புறீக....

சண்டையோட கோரமுகமும்
சாவுகளோட ரத்தக்கறையும்
நிர்வாணம் காட்டித்தா
நெல நிறுத்திப் பாக்கணுமா ?

பாகமொண்ணு பாகரெண்டு
படம்புடிச்ச வேளையில
ஓடிவந்து கத்தியிருந்தா
ஒத்த உசுரு பொழச்சிருக்கும்...

கொன்னுகலைச்ச கொடுமையும்
கலைச்சிக்கொன்ன கருமமும்
பாதி பகுதியா காட்டித்தா
பச்சக் காகிதம் சேக்கணுமா?

எரியிறது எங்கோ இருக்க....
ஈரக்காட்டுல என்னத்துக்கு
வெறகொடிக்க போறீங்க...?
பதுக்கிவச்ச பாசமெல்லாம்
கொழுந்துவிட்டு எரியவேணும்....!!!
இங்க
கொளுத்திவிட்டா எரியவேணும்....?

நாப்பதடி வட்டத்துல
நரகலும் நகரலுமா
இடுப்புத்துணி மானத்தோட
இப்படியே இருந்துக்குறோம்..

இருட்டுல மொகமூடியுமா
அம்மணப் பொணங்கள் காட்டி
போராட்டமுன்னு
புளுகிச்சொல்லி
பொருள்தேடி அலையாதீக....!!!

எழுதியவர் : சரவணா (11-Nov-13, 10:31 am)
பார்வை : 96

மேலே