குழந்தைகள் கவனத்திற்கு
சம்பவ கொடுமைகளை,
வெறும் சம்பிரடயாமாய்,
பார்க்கும் சமுகமே!
பள்ளிக்கு சென்ற,
பச்சிளம் குழந்தை,
பலியாகி போனது,
பேருந்து விபத்தில்!
அலட்சியத்தின்,
அவலத்தை,
விபத்து என்று,
எப்படி சொல்வது?
ஒரு நாள்,
ஊர்வலம்,
ஒரு வாரம்,
செய்தி தாளில்,
முடிந்தது எல்லாம்!
இழந்தவன் வலியை,
உணர,
இருப்பவன் சம்மதிப்பது,
இல்லை!
நடந்ததை மாற்ற,
யாராலும் முடியாது,
நடக்காமல் தடுக்க,
நம்மால் முடியும்!
ஆழ்கிணறு குழாயில்,
தண்ணீர் எடுக்க,
நாம் நரபலி,
கொடுத்த,
குழந்தைகளின்,
எண்ணிக்கை எத்தனை?
கடவுள் குழந்தைகளை,
தேவதைகளின் வயிற்றில்,
பிறக்க செய்து,
சாத்தான் கையில்,
சாக கொடுக்கிறான்!
முள்ளு செடிகளின்,
மத்தியிலே,
முல்லை செடி,
எப்படி வாழும்?
மறதி நம்,
தேசிய வியாதி,
என்று,
நிமிடத்துக்கு,
ஒரு முறை,
நாம் நிருபித்தது போதும்!
பிள்ளை செல்வங்களை,
நாம் பேணி காப்போம் என்று,
புது சபதம்,
ஒன்றை எடுத்திடுவோம்!!!