முதற் பிரிவு

வாசல் தாண்டினால் தான்
வாழ்க்கையே புரிகிறது
சில சமயங்களில்!.....நம்
காதல் கூட அழுகிறது
பிரிவைத் தாங்க முடியாமல் !!!......

என் பேச்சைக் கூடக் கேட்க
யாருமில்லை என உணர்கிறேன்
முதற் தடவையாய்!....
கண்ணீரையும் கவலையையும்
உறவாய்க் காண்கிறேன் இப்போதெல்லாம்
என்னை அடிக்கடி விசாரிக்கின்றன
இந்த இரண்டும் தான்!!!.....

ஒரு முறையாவது என்
மனசுக்குள்ளே சென்று பார்
உன்னை அன்றி வேறொன்றையும்
காணமாட்டாய் அங்கே!........
என் அமைவிடம் உன் இதயம் தான் என்பதை
நான் தான் ஞாபகப்படுத்த வேண்டுமா
ஒவ்வொரு தடவையும் உனக்கு!!!.....

தேடுகிறேன் உன் அன்பை மட்டுமே
எது இருந்த போதிலும் ....
வாழ்வின் அத்தனை உறவையும் கண்டேன்
உன்னில் தான்!....
உன்னைப் பார்க்க மாட்டேனா
ஒரு நிமிடமாவது என ஏங்கிய
ஒவ்வொரு நிமிடமும் ஏமாந்து
போனேன் தொடர்ந்தும் !!!....

எத்தனையோ உறவுகள் அருகில் இருந்தும்
தேடி அழுகிறது என் இதயம்
உன்னைத் தேடியே .......
தென்றல் காற்றை ஆராட்சி பண்ண
ஆசைப்படுகிறது என் இதயம் ...அதில்
உன் மூச்சுக் காற்றைப் பிரித்தெடுத்து ...அந்த
சுகத்தையாவது அனுபவிக்கலாம் என்று!!!......

என் மனதில் மிதக்கும்
உன் நினைவுகளைத் தனிமை
மூழ்கடித்து விடுமோ என்னும் பயத்தில்
போராடிக்கொண்டிருக்கிறேன் பிரிவுடன் !...
மூன்று நாட்கள் கூட
மூன்று ஜென்மங்களாய்த் தான் தெரிகிறது
நீ என் அருகில் இல்லாததால்!...
இனி ஒரு பிரிவு வேண்டாம்
என் உயிரே ...................
காத்திருக்கிறேன் உன் வருகைக்காய்
ஏக்கத்துடன்!!!!!..........................

எழுதியவர் : ரமணன் ஷியாஹ் (11-Nov-13, 6:57 pm)
சேர்த்தது : ரமணன் ஷியாஹ்
Tanglish : muthar pirivu
பார்வை : 97

மேலே