அரங்கேற்றம்

திரையில் காணும்
நிழல்களின்
காம லீலைகளை
பொது இடங்களில்,
எல்லாவற்றையும்
துடைத்துவிட்டு,
கூச்சம் சிறிதுமின்றி
நிஜமாக்கி
அரங்கேற்றுவோரைக்
கண்குளிரக் கண்டு
மனம் இனிக்க இரசிப்பதா?
அல்லது
மனம் வெதும்பிக்
காறித் துப்புவதா?
கண்டிப்புக் காட்ட
வேண்டியவர்களிடமும்
ஒழுக்கத்தைக் குப்பையாய்
மதிப்பவர்களிடமும்

எங்கு செல்கிறோம்
என்று யார் கேட்பது?

தவறான இலக்கு
அவர்களுக்கு விதிவிலக்கு!

எழுதியவர் : அன்புமணி செல்வம் (11-Nov-13, 8:44 pm)
சேர்த்தது : Anbumani Selvam
பார்வை : 80

மேலே