கவிதைகளுடன் நான்

ஏதேனும் ஒரு கவிதைக்குள்
பிரவேசித்துக் கொண்டிருக்கிறேன்
எப்போதும்..

ஏதேனும் ஒரு கவிதைக்கு முன்
மன்றாடுகிறேன்..

ஏதேனும் ஒரு கவிதையின்
கைப்பிடித்து செல்கிறேன்..


கவிதையின் திசை தெரியா
வனாந்தரத்தில் தொலைந்து போகிறேன்,.

இருளிலிருந்து வெளிச்சத்திற்கும்
வெளிச்சத்திலிருந்து இருளிற்குமான
எனது பயணங்கள்
ஒரு கவிதையின் கரம் பற்றியவாறே
இருக்கின்றன...

என் இரவுகளை
தின்று தீர்க்கும்
கவிதைகளுக்காய்
காத்திருக்கின்றன
உண்ணப்படுதலின் சுகத்திற்குப்
பழகிப்போய் விட்ட
என் இரவுகள்.

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (12-Nov-13, 1:51 pm)
பார்வை : 130

மேலே