ஒரு காந்தியக் காதல்
ஒரு காந்தியக் காதல்.
உன் நினைவால் ......
என் தூக்கம்,
ஒத்துழையாமை இயக்கம்
நடத்துகிறது.
தண்டியைத் தாண்டி
நீயிருந்தாலும் ,
அவ்விடம் நோக்கியே ...என்மனம்,
யாத்திரை செய்கிறது.
உன் உள்ளத்தின்
அங்கீகாரத்திற்காக
என் உணர்வுகள்
ஒரு சத்தியாகிரகமே செய்கின்றன!
உன் பிரிவிலிருந்தோர்
நிரந்தர விடுதலைக்காக ...
நித்திய போராட்டம் ...ஒரு
சத்திய வழியினிலே.
(கல்லூரி நாட்களில் யான் எழுதிய கவிதை)
பாலு குருசுவாமி.