வலிகள்
வசந்தத்தை தேடியே வளைகுடா வந்தோம் - குடும்ப
பாசத்தின் வலிகளை தினம் தினம்- தின்றோம்!.
எண்ணங்கள் நிறைவேற ஆண்டு பல கொண்டோம்
குடும்பம் மகிழ்வாய் சிரித்திடவே- இங்கு எரிமலையாய் வெந்தோம்.
சுமைகளை கர்ப்பம் தாங்கி , சோர்ந்து
இங்கே வீழ்ந்தோம் -அது
சுகமாய் பிரசவிக்க எங்கள் வயதுகளை கொன்றோம்!
கொன்றது போக, எஞ்சியுள்ளதில் ஏகாந்தத்தை இழந்தோம்.....இறுதியில்
எமக்கென்ன வேண்டும் என்பதை என்னிடவே மறந்தோம்!
ராணிமோகன்
பெங்களூர்