நடைமுறை சாத்தியங்கள்
கத்திக் கப்பல் செய்து கொடு
காகிதத்தில் என்றது குழந்தை
வேண்டாம் அஹிம்சை
விட்டு விடு என்றேன்....
வெட்டவா போகிறது
வினவியது குழந்தை
வெட்ட வைக்குமாடா நினைவு
வேண்டாம் என்றேன்....
நடைமுறையில் நீ ஏமாளி என்றது குழந்தை
நல்லது மிக நல்லது என்றேன்....