மொழி

எண்ணத்தின் எழுச்சிதனை எழுத்திலே வடித்தெடுக்க
என் உள்ளத்து ஆசையை உலகோர்க்கு உணர்த்த..!

வாழ்வின் அர்த்தமதை உலகிற்கு உரைக்க
வறுமையின் கொடுமையினை வளப்படுத்த...!

உதவிடும் உறவினை உறுதிப்படுத்திட - என்
உதடுகளின் அசைவினால் பிறந்திடும்
என் பிள்ளை....!


ஓராயிரம் மொழிகள் காண நேரினும் - என்
ஓர் அழகி நீ மட்டும் தான்...!

என் மனதின் உண்மைஉணர்வை உன்னால் மட்டுமே
உரைக்க முடியும்.உதவிடுவாயா.?
இன்னும் சில நிமிடங்கள்..!

ஓர் வார்த்தையும் கவிதைதான் உன்னில்
பிறக்கையில் "அம்மா" ...!

ஓதப்படும் வேதங்கள்யாவும் உன்னில்
பிறந்தவையே...! இகழ்தலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்
இன்பம் நிறைந்த உன்னை இகழ்வோரை அல்ல..!


தன் தாயின் மொழியைப் புரிந்து கொள்ளாதப்
பிள்ளையும் - தன்(தாய்) மொழியை உணரும்
விந்தை உணர்ந்தேன் உன்னால்...!

பிரிவென்பது பிரிக்க முடியாத ஒன்று - ஆனால்
நம்மிடையே மட்டும் அது பிரிந்து நிற்கிறது..!

என்ன தவம் செய்தேனோ.?
என் நாவில் நீ பிறக்க..!
என்ன தவம் செய்தேனோ.?
என் நாவில் நீ பிறக்க...!

நீ மிகவும் தன்மை நிறைந்தவள் தான் இன்று ஊடக
மோகத்தால் உதறப்பட்டு நிற்க்கையில்...!

எல்லாமும் எமக்கே தந்தும் ஏழையாகா நீ
பெரியவளே பெருமைக்குரியவளே...!

இன்னும் யாருக்காய்க் காத்து நிற்கிறாய்
கல்லறை வாயிலின் கல்வெட்டுகளில்
எழுத்தாக...!


நீயும் நானும் ஒன்றுதான் உணர்வை வெளிபடுத்தும்
வாய்ப்பைத் தேடி அலைகையில்...!
இன்று பெற்றுக் கொண்டேன் அந்த வாய்ப்பை
உன் வழியாய்...!

எழுதியவர் : ஜென்னி (13-Nov-13, 4:35 pm)
சேர்த்தது : ஜெனி
Tanglish : mozhi
பார்வை : 167

மேலே