ஒரு தாயின் கதறல்

விரட்டி துரத்தும் வறுமை..
விடியுமட்டும் பொறுமை...
விறகிடுவேன் அடுப்புக்கு நாளை...
கையை கிழிக்கும் கல்லும் சோறு தரும்
பொறுத்திரு பொங்க வைக்க இதோ அரிசி வரும் வேளை..
கால்வயிறு நான் உண்டு முழு வயிறாய் உனை வளர்த்து முழு மனதுடன் கல்லூரி சேர்த்தேன்...
படித்ததும் பட்டம் பின் ஏன் இந்த ஓட்டம் மகனே..
கல் கையை கிழிக்கிறது உன் கல் நெஞ்சமோ என் மனதையே கிழிக்கிறது...
விடியுமட்டும் உனக்காய் விழித்தது பாவமா? இருண்ட பின்னும் உனக்காய் உழைத்தது சாபமா?
சோர்ந்து போகிறேன் தாய்மையும் எனக்கு கிடைத்த சாபம் என்று..
என்றோ விறகிட நீ வருவாய் அன்றாவது எனக்காய் ஒரு சொட்டு கண்ணீர் வடி அதுவே உன் தாய்க்கு போதும்..
பர்ஷான்

எழுதியவர் : பர்ஷான் (14-Nov-13, 10:27 am)
பார்வை : 91

மேலே