கவிஞர்களே விதைப்போம் விதையொன்றை

புலவர்களே புலவர்களே
ஒன்றுகூடி எழுப்புங்கள்
எழுத்திலோர்
ஓலைக் குடிசையை...!!!

தமிழனில்லை தமிழகத்தில்
தமிழன்னையும் தமிழினமும்
நிழலின்றி அலைகிறது ..!!!


கவிஞர்களே கவிஞர்களே
கவிதையிலே கண்டறியுங்கள்
நவீன
பாதுகாப்பு ஆயுதமொன்றை ...!!!

அரசியல் நரிகள் ஊளையிடுகிறது
பயந்து
நடுங்குகிறாள் பாரதத்தாய் ..!!!


கவித் தோழிகளே தோழிகளே
கவி ஏடுகளை இணைத்து
ஆடையொன்றை
கச்சிதமாய் தைத்திடுங்கள்

அயலார் கலாச்சாரத்தில்
தமிழர்களின்
அங்கம் தெரிகிறது !!!


கவித் தோழர்களே தோழர்களே
கவிக்கோலைத் தூண்டு கோலாக்கி
கவி வரிகளை
தீயதை தீய்க்கும் நெய்யாக்குங்கள்...!!l

தேசத் தீபங்கலெல்லாம்
போதை இருளில்
ஆனந்தமாக உறங்குகிறது...!!!


எழுத்தாளர்களே எழுத்தாளர்களே
எழுதுகோலின் மையிலே
மகத்தான மருந்தொன்றை
உருவாக்குங்கள்...!!!

செயற்கையெனும் கிருமிகளால்
இயற்கை அன்னை
நோயுற்று இன்னல்படுகிறாள்...!!!


கவித் தோழர்களே தோழிகளே
ஊன்றுவோம் ஊன்றுவோம்
நாளும்
நற் கருவொன்றை ஊன்றுவோம்...!!!

நாளை
விருட்சமாகி தோப்பாகி
தூய்மைப் படுத்தட்டும்
மாசடைந்த மானுடத்தை...!!!

எழுதியவர் : சுதா (14-Nov-13, 11:07 am)
சேர்த்தது : சுதா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 617

மேலே