என் மதுபான மலரே நில்
என் சபர்மதி நதியே நதியே
கொஞ்சம் நில்லு
ஒரு ச ரி க ம ப த நி ச
நீதான் சொல்லு
என் நெஞ்சில் ஓடும் கோதாவரியே
சொல்லு சொல்லு
எனை கொன்று சென்றாய் ரதியே ரதியே
உன் காதல் சொல்லு
பெண்ணே உந்தன் வருகையால்
தென்றல் தெருவில் சலசலப்பு
அன்பே உந்தன் புன்னகையால்
பூக்களுக்குள்ளும் பரபரப்பு
உன்னை பார்த்து வியந்திட்ட
நிலவுக்கேனோ படபடப்பு
உன் அன்பை நானும் வென்றதால்
என் இதயத்தில் மட்டும் கலகலப்பு
விடிகின்ற நேரத்தில் நீ விழித்தாலே
சூரியன் பூமிக்கு வருவதில்லை
விடிகின்ற வரையினில் நீ இருந்தால்
நிலவுக்கு இங்கே வேலை இல்லை
உன் காலடி எடுத்து
கோலத்தில் வை
கோலம் சிறக்கட்டும்
உன் புன்னகை எடுத்து
ஈழத்தில் வை
ஈழம் சிரிக்கட்டும்
உன் மேனியின் நிறத்தை
வானத்தில் வை
வானம் சிவக்கட்டும்
உன் செந்தமிழ் பேச்சை
டெல்லியில் வை
அது தமிழை நினைக்கட்டும்
உன் காதலை என்னில் வை
என் ஜீவன் வாழட்டும்
என் மதுபான மலரே நில்
தமிழன் ஒன்றாய் கூடட்டும்