தேடல் பரிசுகள்

தேடல் பரிசுகள்

பாதங்கள் வரைந்த
மணற்கோலங்களை யெல்லாம்
காற்றுக்குப் பின்னால் தேடியக் கண்ணாமூச்சி

எட்டிடும் திசைகளி லெல்லாம்
காணாப்பொய்த் துயரங்களின்
தேடுதல் துவக்கவிழா

சிலபாதைகள்
அச்சுக்களை சுமந்தபடி அதிலே

பாதம் திணிக்கையிலே
சரியெனத் தோன்றிய வேடிக்கை

தேடுதல் ஒருவருக்கு மட்டும்தான்

நமைக் குறித்த தேடல்களெல்லாம்
நாம் தேடிச் செல்லும்
தேடுதலிடத்தி லில்லை

வழி தவறிய தவறுகளினால்
மீண்டும் திரும்புகையிலே
நமக்கான தேடுதலில் யாரோ ஒருவர்
ஏற்றுக்கொள்வோம்,,,
நமக்குண்டான தேடுதல்களை,,,

மணற் துகள்களால் நிரப்பப்பட்ட
அவர்களின் முகப்புப்பக்கங்களே
நம் தேடுதலுக்குண்டான
பிரதிபலிப்புகள்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (14-Nov-13, 7:14 pm)
பார்வை : 150

மேலே