+குழந்தைகளை குழந்தைகளாக நடத்துவோம்+
குழந்தைப்பருவம் மகிழ்வதற்கே
புத்தகச்சுமையும் வேண்டுமோ!
சிரித்துமகிழும் பருவத்தில்
சிறப்புவகுப்பும் வேண்டுமோ!
உறங்கிக்கழிக்கும் பருவத்தில்
சிறுவர்பள்ளி வேண்டுமோ!
கொஞ்சிமகிழும் பருவத்தில்
தாய்தந்தைதிட்டுகள் வேண்டுமோ!
வாழ்க்கைபுரியா பருவத்தில்
பாடம்புரியக் கூடுமோ!
உண்மைபுரியா பருவத்தில்
உதைகள்புரியக் கூடுமோ!
ஆடித்திரியும் பருவத்தில்
அடக்கிவைத்தல் ஆகுமா!
பாடித்திரியும் பருவத்தில்
பதட்டம்குடுத்தல் ஆகுமா!