இலக்கிய சுவை அறிவோம்

நாட்டு புறப் பாடல்களின் வாயில்களாக
விடுபுதிர்கள்
*************************************************************
ஒரு கையி தக்க பொளந்து
சாத்தின கதவிருக்க
ஏத்தினவிளக்கிருக்க
இராத்ரிவந்தது யார் ?
அந்த டங்கு டிங்குக்காரன் யார் ?

டிங்குக்காரன் கொசு

சாத்தின கதவிருக்கவும் ஏத்தின விளக்கிருக்கவும்
துணிவாக வீட்டினுள் நுழையும் கொசுவின்
இயல்பு பற்றி புதிராக கூறப்பட்டுள்ளது
************************************************************
ஒரு கையி தக்க பொளந்து
சாத்தின கதவிருக்க
பூட்டின பூட்டிருக்க
இராத்திரி வந்த கள்ளன் யாரடி ?
அவன் தாண்டி அத்த மவன்
நேரங் கெட்டநேரத்திலே
நெல்லிக்குப்பம் டேஷ னிலே
திட்டம் போடவந்தானோடி ....

கள்ளன் அத்தை மகன்

ஒரு பெண் (தோழி )மற்றொரு பெண்ணிடம் (தலைவி )வினவுவதாகவும் அதற்கு விடையிறுப்பதாகவும் பாடல் அமைந்துள்ளது .
கள்ளன் யார் ?என்ற வினாவிற்கு "அத்தை மகன் "
என்று விடையளிக்கப்படுகிறது .சாத்தின கதவிருக்க பூட்டின பூட்டிருக்க வீட்டினுள் நுழைந்த
அத்தைமகனின் அருஞ் செயல்கள் கூறப்படுகிறது
**************************************************************************

கத்திச் சடை பின்னிருக்க
முத்துச் சரம் கோர்த்திருக்க
சாத்தின கதவிருக்க
ஏற்றின விளக்கிருக்க
நாத்தனார் படுத்திருக்க
இராத்ரி வந்த திருடன் யாரடி ?

திருடன் பூனை
****************************************************************************

குறிப்பு :இவ் விடுபுதிர்கள் கலபயணத்தின் போது
காட்டு நெமிலி என்ற ஊரில்
கிடைத்ததாகும் .

எழுதியவர் : umamaheshwari kannan (14-Nov-13, 8:17 pm)
பார்வை : 211

மேலே