+காடு போல உலகம்+
சிங்கம் போல தாத்தா
சிறுத்தை போல பாட்டி
யானை போல மாமா
பூனை போல அத்தை
கரடி போல அப்பா
மானைப் போல அம்மா
முயலைப் போல பாப்பா
ஆசை முத்தம் கேப்பா
காடு போல உலகம்
விலங்காய் மனிதன் உலவ
மனித குணங்கள் அனைத்தும்
விலங்காய் மாறிப் போனதோ!
நன்றி என்றால் நாயிருக்கும்
தந்திரம் என்றால் நரியிருக்கும்
வீரம் என்றால் சிங்கமிருக்கும்
வேகம் என்றால் சிறுத்தையிருக்கும்
ஒற்றுமை என்றால் காக்கையிருக்கும்
உழைப்பு என்றால் எறும்பிருக்கும்
சமாதானம் என்றால் புறாவிருக்கும்
சண்டை என்றால் மனிதனிருப்பான்!