நான் ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்

நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் மனைவியின் தலையில் நடுவதற்கு

பசளை உண்ணத் தெரியாது
நீர் அருந்தத் தெரியாது
சுத்தப்படுத்தி பராமரிக்கத் தெரியாது
என்று அவள் சொன்னாள்

நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் காதலியின் தலையில் நடுவதற்கு

அது இன்று
நிண்டு வளர்ந்து
குளிர் காலங்களிலும், நிலாக்காலங்களிலும்
என் முகம் முழுவதையும் மூடிக்கொள்கிறது

எழுதியவர் : பைசால் இலங்கை (21-Jan-11, 4:49 pm)
சேர்த்தது : a.a.faisal
பார்வை : 447

மேலே