இதயம் வலிக்கிறது
என் விதியே என்னை அழைக்க மாட்டாயா
உன்னை நான் விரும்பி அழைக்கிறேன்
என் கடன் இன்னும் தீர்க்கப் படவில்லையா...?
நான் பட்ட வலிகள் மாறுமா உண்ணவும்
உறங்கவும் முடியாமல் தவிக்கிறேன்
மற்றவர்களுக்கு நான் ஓரு உணர்வற்ற கேலிப் பொருளாய்
காலமெல்லாம் கலங்கி நான் வாழ்வதா...?
போதுமென் இதயம் வலிக்கிறது.
ஒரு நொடி ஏனும் வேண்டாம் எனக்கு
உன்னுள் ஒளிந்து கொள்ள நான் விரும்புகிறேன்
என் கடன் தீர்ப்பாயா பெண்ணே ......?