குண்டு சித்தப்பு

தான னனே தன்ன னனே
தன்ன னனானே
தான னனே தன்ன னனே
தன்ன னனானே

வான ரத்தின் சத்தம் கேட்டேன்
குட்டிப் பாப்பாவே!
வந்து யென்ன கடிச்சுப் புடும்
குட்டிப் பாப்பாவே!

யானை யொன்னு வந்து ருச்சு
வீட்டுக் குள்ளேதான்!
பயந்து போனேன் காப்பாத் துங்க‌
குண்டு சித்தப்பு!

வீட்டுக் குள்ளே யானை யில்ல‌
குட்டிப் பாப்பாவே!
வீணாய் உனக்கு சந்தேக மேன்
குட்டிப் பாப்பாவே!

குரங்கு மெங்கும் காண லியே
குண்டு சித்தப்பு!
என்னைத் தானே மங்கி யென்றாய்
குண்டு சித்தப்பு!

குரங்கா யுனை ஆக்கி யதால்
குட்டிப் பாப்பாவே!
குசும்பா யென்னை யானை யென்றாய்
குட்டிப் பாப்பாவே!

இரண்டு பேரும் சிறிது நேரம்
வன விலங்கானோம்!
கோப மின்றி சிரித்த தனால்
மனம் நலமானோம்!

ஹஹா ஹஹா ஹஹ ஹாஹா
ஹக் கக்கக்கா!
ஹஹா ஹஹா ஹஹ ஹாஹா
ஹக் கக்கக்கா!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Nov-13, 2:51 pm)
பார்வை : 88

மேலே