அவனும் அவளும்
அவனும் அவளும்
இணைந்தனர்
அன்பினில் வாழ்ந்தனர்
நீயா நானா என்று
போட்டியில் எழுந்தனர்
நேசம் மறந்தனர்
தீர்ப்புக்கு காத்திருந்தனர்
அவன் அவனாக
அவள் அவளாகப்
பிரிந்தனர்
நான் என்பது மறைந்து
நாம் ஆகவில்லையென்றால்
திருமணங்கள் வாழ்வதில்லை
-----கவின் சாரலன்