நீயின்றி நானில்லை

உன்னை பிரிந்து
ஒரு மாதம்தான் இருக்கும் !

ஒவ்வொரு நாளும்
ஓராண்டு பிரிவின்
வேதனை!

குளித்து வரும்போது
தலை துவட்டுவாய்!

போதும் போதும்
என்றாலும்
உணவு பரிமாறி
கொண்டேயிருப்பாய்!

உழைத்து களைத்து
வந்தால் முந்தானையால்
விசிறிவிடுவாய்!

நான்
எது செய்தாலும்
ஆகா வென
பாராட்டுவாய்!

இப்படி ஒவ்வொரு நிமிடமும்
உன்னையே
நினைத்து கொண்டிருக்கிறேன் !

பிரிந்த ஒருமாதத்தில்தான்
உன்னையே உணர்ந்து கொண்டேன்!

உயர் பதவி வேண்டாம்!
மாத சம்பளமும் வேண்டாம்!
உன்னோடு வாழவே
பிரியப்படுகிறேன்!

உறங்கும் போது கூட
மறக்காத
என் அம்மாவுக்காக
நாளையே புறப்படுகிறேன் !

* * *

எழுதியவர் : கோடீஸ்வரன் (17-Nov-13, 7:44 am)
Tanglish : neeyindri naanillai
பார்வை : 123

மேலே