எதுவரை காத்திருப்பது

வறுமைக்கு வாக்கப்பட்டு
அவமானத்திற்கு அங்கீகரிக்கப்பட்டு
ஏமாற்றத்திற்கு ஏற்றவன் என்ற
பெயரை பெற்றேன்
அத்தனனயும் கடந்தது வாழ்க்கையில் சிறக்க வசந்ததத்தை தேடி சென்றேன்
விதியின் சதியால்
விழியில் பட்டு விட்டால் அவள்
விலகினாலும் விட்டு விடவில்லை- அவள் நினைவுகள் என்னை- அவள்
நினைவுகளால் கனவுகள் கொண்டேன்
கனவுகளால் அவள் மீது
காதல் கொண்டேன்
காதல் கொண்டதால்
மனதில் மகிழ்ச்சியை மறந்து
இமைகளை இழந்து
இருட்டில் நிற்கிறேன்
இருண்டது இரவானால்
விடியும்வரை காத்திருப்பேன்
விடியலும் இரவானால்
எதுவரை காத்திருப்பது .......?

எழுதியவர் : தென்னு (17-Nov-13, 9:13 pm)
பார்வை : 164

மேலே