பட்டினத்தில் பகல் நிலவு - வாழ்க்கை
வாழ்க்கையெனும் நெடுங்கனவு
வந்து வந்து சிரிக்க
வாலிபத்தில் வாஞ்சை கொண்டு
பட்டினத்தில் குதிக்க
இரவு பகல் இரு பொழுது
அத்தனையும் மறக்க
நாள் போக சொந்த பந்தம்
யாரென்று விழிக்க
எண்ணி எண்ணி இந்த வாழ்க்கை
இப்படியே கடக்க
இன்ப துன்பம் சொந்த பந்தம்
யாவையுமே வெறும் காசு பணம் சுமக்க
இதயம் ஒன்று பாறை போல
பாதையெங்கும் கனக்க
போகுதடா இந்த வாழ்க்கை
பட்டினத்தில் புதைந்த வாழ்க்கை ...!