காதலின் கதை

கல்லூரி வளாகத்தில் ,
காத்திருந்த என்னிடம் ,
வார்த்தைகளால் மோதி,
கண்களால் காதல் கொண்டு ,
இதயத்தை வருடினாய் ...

எதுவும் பேசாமல் ,
என் பின்னே வந்து,
என் மனதை திருடினாய் ...

காதல் நிரைந்த கண்களுடன் ,
என் முன்னே வந்து,
என் காதலைத் தீண்டினாய் ...
காதல் ...... வார்த்தைகளில்லை ...

படிப்பு முடிந்ததும் ,
உனைப் பிரிய இயலாமல் ,
தனியே வந்துக் கரம் பிடித்தேன் .

இன்றோ!
இந்த உலகமே என் கரத்தில் .

காரணம் ;
உன் குழந்தைகள் ...

நீயோ !
உலகின் ஒரு ஓரத்தில் ,
இருந்தும் என் உயிரின் இரத்த ஓட்டத்தில் ..............

எழுதியவர் : DHARSHAN (19-Nov-13, 9:12 am)
சேர்த்தது : DHARSHAN
Tanglish : kathalin kathai
பார்வை : 147

மேலே