எத்தனைமுறை விழுந்தாலும்
அதிகமுறை விழுந்தவன்
வாழத்தெரியாதவன் என்று
எத்தனையோபேர் சொன்னபோதெல்லாம்
எனக்குள் அழுதிருக்கிறேன்.
கடவுளைக்கூட திட்டியிருக்கிறேன்.
ஆனால், இப்போது சந்தோசப்படுகிறேன்.
ஒருவன் பலமுறை விழுகிறான் என்றால்
பலமுறை எழவும் வேண்டும்
என்ற உண்மை தெரிந்தபிறகு.
தெரியாமல் விழுவது தவறல்ல,
விழுந்தும் எழாமல் இருப்பதே தவறு.
எத்தனைமுறை விழுந்தாலும்,
எழத்தெரிந்தவன் நான்.
நான் யாருக்கும் புத்தி சொல்லவில்லை,
என்னைப்பற்றி மட்டுமே சொல்கிறேன்.
என்றும் அன்பின் அன்பன்,
வென்றான்.