உறவே நீயன்றி கிடையாது

வாழ்வே நீ என நினைத்திருந்தேன்-உன்
வாசம் எனெக்கென நினைத்திருந்தேன்
நேசம் எனெக்கென நினைத்திருந்தேன்
யாவும் எனெக்கென நினைத்திருந்தேன்

காதல் எனெக்கென நான் உணர்ந்தேன்-உன்
கருத்தில் நான் என திளைத்திருந்தேன்
கனவே நீ என கரைந்திருந்தேன்
கவலை என்பதை மறந்திருந்தேன்

நினைவில் நீ இல்லா பொழுதினிலே
கனவில் உன்னுடன் நான் இருந்தேன்
நிஜத்தில் அருகில் நீ இல்லையெனில்
நினைவில் அருகில் நான் இருந்தேன்

உணர்வில் என்னுடன் நீ இருந்தாய்
உடலால் வேறென நீ இருந்தாய்
உளத்தில் நீயே நிறைந்திருந்தாய்
உருவில் நானாய் நீயிருந்தாய்

பிரிவே என்பது இனியேது
உறவே நீயன்றி கிடையாது

எழுதியவர் : ஸ்ரீதர் (19-Nov-13, 3:43 pm)
சேர்த்தது : ஸ்ரீதர்
பார்வை : 124

மேலே