முற்றுப்புள்ளி
குழந்தை அழுகைக்கு தாய்ப்பால் முற்றுப்புள்ளி
தாய்ப்பாலுக்கு பசி நிரம்பியவுடன் முற்றுப்புள்ளி!
பகலுக்கு இரவு முற்றுப்புள்ளி
இரவுக்கு விடியல் முற்றுப்புள்ளி!
இளமைக்கு முதுமை முற்றுப்புள்ளி
முதுமைக்கு இறப்பு முற்றுப்புள்ளி!
காதலுக்கு காமம் முற்றுப்புள்ளி
காமத்திற்க்கு களவு முற்றுப்புள்ளி!
ஆகமொத்தம்
முற்றுப்புள்ளி ஒரு முடிவுரையின் முன்னுரை!