ஒரு தாயின் குமுறல்
ஏன் குடித்துக் குடித்துக்
குடும்பத்தில் நிம்மதியைக்
குறைக்கிறார்கள் !!!!!!!!
குடி குடியைக் கெடுக்கும்
என்று தெரிந்து இருந்தும்
அதனால் வரும் பாதிப்புகள்
தெரிந்து இருந்தும் ஏன்
இப்படி குடித்துக் குடித்துக்
தனது உடலையும் கெடுத்துக்
கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களின்
நிம்மதியையும் கெடுத்து விடுகிறார்கள் ;
இதற்குத் தீர்வு தான் என்ன !!!1
தெரியாமல் தவிக்கிறது எனது இதயம் !!!!!!
திருந்துவார்களா ??? இதுதான்
இவர்களின் வாழ்க்கையா ???
யார் மாற்றுவது?? எனது மனதோ
துயரத்தில் அழுகிறது !!!
பொய்யும் சத்தியமும் இவர்களுக்கு
சர்வ சாதாரணம் ; நம்மால்
திருத்த முடியாது எனும் நிலை
வந்து விட்டதால் ; இறைவனிடம்
இவர்களை விட்டுச் செல்கிறேன் ;
(துயரத்தில் இருக்கும் ஒரு தாயின் குமுறல் )