உயிர் கொடுப்போம்

ஓட்டப் பானையில
இரெண்டு கண்ணு
வெச்ச பொம்ம ஒன்னு
சோழ காட்டுக்குள்ள
வந்து நிக்குதய்யா

வைக்க புல்லு மேனி
முழுக்கையி சட்டப் போட்டு
கொக்கு ஓட்ட
வந்து நிக்குதய்யா

சத்தம் போடலையே
சண்டைப்போடலையே
பொம்ம ஒன்னு
கொக்குக்குதான்
தண்ணீர் காட்டுதய்யா

பக்கத்து காட்டுல
கட்ட மேல கட்ட வெச்சு
வீடு ஒன்னு செஞ்சு வச்சுருக்கு
இந்த பொம்மைக்கு நினைப்பு
அங்கதான் இருக்கு

கட்டுக்காறேன் தோட்டக்காறேன்
கம்மாகர மேட்டுமேல
வந்து நின்னு தோட்டத பாக்குறான்

என்ன கொஞ்சம் பாருங்கைய்யா
அந்த வீட்டுக்குள் சேருமைய்யா
நிழல் கொஞ்சம் தாருமைய்யா

இரெண்டு காலு
இரெண்டு கையி
இரெண்டு கண்ணு
ஒத்த மூக்கு
இருக்கு
ஆனா உயிர்
இல்லையே

பயம் விட்டுப்போச்சு
கொக்குக்குதான்
பயம் விட்டுப்போச்சு
என் மண்டையில
வந்து நின்னு விளையாடுது

எனக்கு உசுரு
தாருமைய்யா.........

எழுதியவர் : kalaiselvi (20-Nov-13, 9:19 am)
Tanglish : uyir koduppom
பார்வை : 659

மேலே