நிலவு பெண்

மன திறப்பு விழா / நிலவு பெண்

பெண்ணின் தன்மையை பற்றி பேசாத கலைஞன் இல்லை...
இதோ எமது சின்ன படைப்பு, உங்களின் மன திறப்பு ..

எல்லையற்ற பெண்மையில் இல்லை என்று ஒன்றும் இல்லை..
தொல்லை சிறுது தந்தாலும் தொலைந்து போகும் அவள் இருந்தால்..

விண்ணை கண்ட போது, விரல் வைத்து எழுத தோன்றும்,
விண்ணில் உள்ள நிலவை கண்டு சிறிது சிறிதாய் பேச வைக்கும்,
அக்கம் பக்கம் பார்த்துகொண்டு அவளை எண்ணி பேச வைக்கும்,
தனிமை தந்து, இனிமை கண்டு, வியப்பு பலவும் தந்து செல்லும்.....

காதல் என்று சொல்லவில்லை
மோதல் என்று சொல்லி கொண்டேன்
மனதில் வந்த மோதல் என்று சொல்லி கொண்டேன்..

கடமை கண்டு விலகி நின்றேன்
இளமை ஏனோ பொறுக்கவில்லை..

இரவு பகல் வந்து போகும்
இதயத்தில் அவள் தங்கி செல்வாள்..
வாடகை மறுத்த போதும்
வசந்தம் தினமும் தந்துசென்றாள்.

காத்திருக்க நானும் சொன்னேன்
காத்திருந்து கைப்பிடித்தாள்...

நேற்றை வரைக்கும்
கனவில் வந்தாள்
இன்று ஏனோ நேரில் நின்றாள் ...

இந்த மாதிரியான காதல் அனைவருக்கும் அமையாது...
அமைந்தாலும் தொடறாது..
தொடர்ந்தாலும் இணையாது...
இணைந்தால் பிறியாது....

முனைவர் நந்தகோபால் ராசா

எழுதியவர் : அன்புடன் முனைவர் நந்தகோப (20-Nov-13, 4:32 pm)
Tanglish : nilavu pen
பார்வை : 633

மேலே