விருந்து

விருந்து
****************
மாலை நேரம்.மழை சொட்டச்சொட்ட நண்பர் ஒருவர் முல்லாவைப் பார்க்க வந்தார்.அவருடன் வெகு நேரம் பேசினார்.நீண்ட நேரமாகியும் மழை நிற்கவில்லை.முல்லா சொன்னார்,''இந்த மழையில் நீங்கள் வீட்டுக்குப் போக முடியாது.இன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள்.

''நண்பரும் ஒப்புக்கொண்டார்.நண்பருக்கு சேர்த்து உணவு தயாரிக்க மனைவியிடம் சொல்ல வீட்டுக்குள் சென்றார் முல்லா.பின் திரும்பி வந்து பார்த்தபோது நண்பரைக் காணவில்லை.சிறிது நேரம் சென்றபின் நண்பர் மழையில் நனைந்து கொண்டே வந்தார்.''அடடா,மழையில் நனைந்துகொண்டு எங்கே போனீர்கள்?''என்று முல்லா அவரைக் கேட்டார்.

நண்பர் நிதானமாகச் சொன்னார்,''இன்றிரவு உங்கள் வீட்டில் விருந்து என்பதை என் மனைவியிடம் சொல்லிவிட்டு,அதனால் சமைக்க வேண்டாம் என்று வீட்டிற்குப் போய் சொல்லி வந்தேன்.''

எழுதியவர் : முல்லாவின் கதைகள் (20-Nov-13, 5:57 pm)
Tanglish : virunthu
பார்வை : 137

சிறந்த நகைச்சுவைகள்

மேலே