கால் வலிக்கும்

கால் வலிக்கும்
*************************
அந்த ஊரில் முல்லா ஒருவரைத் தவிர யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. ஒரு ஏழை முல்லாவிடம் வந்து வெளியூரிலிருக்கும் தன தங்கைக்குக் கடிதம் எழுதித் தரச் சொன்னான்.முல்லா சொன்னார்,''முடியாது.எழுதினால் கால் வலிக்கும்.

''வந்தவன் திகைத்து,'அது எப்படி?'என்று கேட்டான்.முல்லா சொன்னார்,''என்னுடைய கையெழுத்தை என்னைத் தவிர யாராலும்படிக்க முடியாது.

உன் சகோதரிக்கு நான் கடிதம் எழுதிக் கொடுத்தால்,அதைப் படித்துக் காட்ட,நான் உன் சகோதரியின் ஊருக்கு நடந்து தானே செல்ல வேண்டும்? அவ்வளவு தூரம் நடந்தால் கால் வலிக்காதா?''

நன்றி ;இருவர் உள்ளம் தளம்

எழுதியவர் : முல்லாவின் கதைகள் (20-Nov-13, 5:52 pm)
Tanglish : kaal VALIKUM
பார்வை : 160

மேலே