பெண் மழலை - குப்பைத்தொட்டி

அன்பும் இல்லை
ஆரீரோ பாட்டும் இல்லை
பெயரும் இல்லை
பெற்றவர் வைக்கவும் இல்லை
வெறும் காகிதமாய்
வெள்ளையாய் நானிருக்க
விலாசம் எழுதாமல்
முகவரி மறைத்தாளே!

'அம்மா' சொல் எனக்கு மட்டும்
அமாவாசை நிலவாய் போனதே!
குளியலே காணாத பெரியவரே!
அடைகலம் தந்த நீவீர் யாரோ?
அறிவீரோ ? - என் கதை.

"'குப்பைதொட்டி' என் இயற்பெயர்
'தொட்டில்' செல்லப் பெயராய்
மடியில் நீ விழுந்ததும் மாற்றம் செய்தேன்.
நீ வீசப்பட்டது - நான் பஞ்சு மெத்தைக்கு
'சக்காலத்தி' என்பதால் இல்லை."

தொட்டு ரசிக்க கருவில் உதைத்தேனே!
விட்டு விலகிட காரணமாய்கொண்டாளோ?
நிலா படுக்கை தந்தாளே!
நிலாச்சோறு ஊட்ட 'நிலாப்பாட்டு' மறந்தாலோ?
மொய்த்திடும் 'ஈ'க்களை மேய்க்காமல் எங்கே சென்றாய்?
எனது கிறுக்கல்கள் எதிர்கால வரலாறாய் மாறிட
திருத்தம் செய்யாது திரையிட்டு தொலைந்தாயே!
மன்னித்துவிடு! தலை குளியலில் அழுதிருந்தால்
தண்டித்தது போதும்! எச்சில் குளியலால் - குப்பையில்.

குப்பைத்தொட்டி-
"கண்ணகி வழிவந்த பெண்ணியமே!
பெண்ணாய் நீ பூமியில் பிரசவிக்க - உன் தாய்
பிச்சையாய் எனக்கு யாசித்தாளே!"

காற்று மேகத்தை வீசியிருந்தால்
கானி நிலம் கூட கன்னியாய் இருக்காதே!
நிலம் விளைத்த விளை நிலம்
நடுகடலில் எறியப்பட்ட தீவாக்கினாயே!
சரித்திர மங்கையர் வரலாறு புரட்டவில்லை
சாக்கடையில் தாமரை மலர கண்டதில்லையோ?
இதய துடிப்பின் பிறப்பு இரத்த கருவறையில்
இரத்தமும் பெண் இனமே! இறப்பாயா?

மனித குப்பையில்
மக்கிபோன மனிதமாய்
வாழ்க்கை வேண்டா!
மக்கும் குப்பையில்
மனிதம் போற்றும்
'கலைவானி' யாய் வளர்கிறேன்.

- செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : (20-Nov-13, 6:18 pm)
பார்வை : 128

மேலே