பெண்கண்ணும்

பெண்கண்ணும்.....

படித்து பட்டம் பெற்றும்
படிப்பிக்கும் பதவி பெற்றும்
படிப்பினைப் பெறாத நங்கையில்
படிந்ததம்மா கறை...

கொலையும் செய்வாள் பத்தினியென்று
நிரூபித்து வருகிறாய்
கள்ளக் காதலனோடு சேர்ந்து
கணவனைக் கொன்று...

பெண் மேல் குற்றமில்லை
ஆண் கொண்ட காமம் வற்றவில்லை என்பார்
மண் சுமக்கும் துட்ட புழுவென
பெண்கண்ணும் கெட்ட ஒழுக்கம் நெளியுதம்மா..

பெண் உரிமையென
நாண் இலா நடையுடைத் தூண்டிலிட்டு
ஆண் மனதை இழுக்கின்றாய்
பெண் மானே வீழுகின்றாய்
ஆண் ரசனைப் பேச்சே வலையென...

மனதில் உறுதியில்லா
மயக்கி மயங்கும் பெண்முல்லை
மழலையர் தாங்கும் கருவறை
மகத்துவம் சுமக்கும் அருகதையில்லை...

ஒழுக்கம் என்ன விலையென்று கற்பில்
வழுக்கும் நவநாகரீக மடந்தைக்கு
தழுக்கும் நடையுடை பாவமெதற்கு
பழுக்கும் பண்பிலா அலங்காரப் பேச்செதற்கு...

தாய்மை போற்றும் நாட்டினிலே
தரங்கெட்ட ஒழுக்கத் தளும்பிற்கு
தனிமனித உரிமையெனும் களிம்பெதற்கு
தண்டித்தலில் பெண்ணெனக் கருணையெதற்கு..??!!

.... நாகினி

எழுதியவர் : நாகினி (20-Nov-13, 6:38 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 60

மேலே