காதல்
நீ கிறுக்கிய காகிதங்கள்
பலரிடம் கவிதையையும்
என்னிடம் காதலையும்
கூறுகின்றன !
சில வியாதிகள்
காற்றில் பரவும் ,
நீரில் பரவும்,
ஆனால்,
இது உன்னால் மட்டுமே...
பரவுகிறது !
சில வியாதிகள்
தொட்டால் பரவும் ,
ரத்தம் மாற்றினால் பரவும்,
இது உன்னைப் பார்த்தாலே ...
பரவுகிறது !
பறவைகள் உணவைத் தேடி
வந்து குஞ்சுகளுக்கு
ஊட்டுவது போல ,
நீ ...
என்னைத் தேடி வந்து
காதலை ,
ஊட்டினாய் !