நினைவுகள்
விடியற்காலையில் விழுந்திடும் பனி
வீட்டின் வாயிலில் வரைந்திருக்கும் கோலம்
விதவிதமான பறவைகளின் கூவல்
விடிந்தவுடன் வீட்டிற்கு வரும் நாளிதழ்
விறுவிறுப்பைத் தரும் காலை தேநீர்
விட்டு விட்டு அடிக்கும் கடிகாரம் - அதை
விடாமல் அணைக்கும் பழுக்கம்
வானொலியில் வழக்கமான செய்தி
வாடிக்கையாக போடும் சீருடை
விரிவான கட்டுரைகள்
விரைவாக வரும் பரீட்சை
விடுப்பு நாட்களை எண்ணி வார நாட்களை கழிப்பது
விடாத மழையில் பள்ளி விடுமுறை
வாடகை சைக்கிள்
விளையாட்டின் வேர்வைத்துளிகள்
வளைந்து நெளிந்து ஓடும் ஒட்டம்
விடுகதை இட்டு கூடி விளையாட்டு
விசித்திரமான பாட்டிக் கதைகள்
விளக்கேற்றும் வேளைவரை விளையாட்டு
விட்டு விட்டு அடிக்கும் காய்ச்சல்
வறட்டு இருமல்
வழிக்கி விழுந்து உடைந்த கால்
விளையாட்டுச் சண்டையில் விரல்களில் இரத்தம்
விருந்தாளிகளின் வருகை
விடியும்வரை அரட்டை
வாழை இலையில் உணவு
வீட்டுவளர்ப்பு நாய்க் குட்டி
வீட்டின் பின்பக்தில் விரட்டி விரட்டி
பிடிக்கும் பூனைக்குட்டி
வீட்டு ஓட்டின்மேல் விளையாடும் அணில்கள்
வளர்ந்திருக்கும் தென்னைமரம்
வாடாமல் இருக்கும் வாழைமரம்
வறட்டுக் கோபம்
விட்டுக் கொடுக்காத மனது
விதவிதமான ஆசைகள்
விண்ணைத்தொடும் யோசனைகள்
இப்படிக்கு
சரவ்