பதில் எழுது புள்ள

உன்னை
என் வாலிபம் கெஞ்சிக் கேட்கிறது
உன்னால் உன்னை தர முடியுமா?
என்னில் என் வாலிபம் சூடாவதையும்
என்னால் பொறுத்திருந்து தாங்க முடியுமா?

நான் சோகங்களை வாங்கிப் போகிறேன்
அதை
உன் வீட்டு ஜன்னல் வழியாக பார் தெரியும்

மரங்கள் செடி கொடிகள் கொட்டாவி விட்டபோது
நான் உனக்கு எழுதிய காதல் கடிதம்
பறந்து போய்விட்டது
அது உன் முகவரிக்கு வந்த சேர்ந்ததா?
பதில் எழுது புள்ள

உன் பதிலை வாசிக்காமல்
என்னால் தூங்கவோ,மரணிக்கவோ முடியாது என்கிறேன்
நம்புவாயா?

எழுதியவர் : பைசால் இலங்கை (24-Jan-11, 1:50 am)
சேர்த்தது : a.a.faisal
பார்வை : 397

மேலே