என் காதல் கதாநாயகி
என் காதலின்
கதாநாயகி
கண் கலங்கியபடி
என் முன்னே வந்தாள்....
பக்கத்தில் அவளின் தந்தை
என்னை வில்லனாய் பார்த்து நின்றார்....
சராசரி தந்தையின் பார்வைதான் அது
எந்த தந்தைதான் விரும்புவார்
மகள் காதலிப்பதை....
என்னிடமிருந்து தன் மகளை
பிரிந்த மகிழ்ச்சியில் மீசையை
முறுக்கி விட்டு ஒரு பார்வை பார்த்து
அவர் வெற்றியை கொண்டாடினார்....
வெற்றி பெற்றது யார் என்று
என்னவளின் கண்ணீர் சொல்லிவிடும்....
காதலை தவறென்று
தவறாய் நினைத்து தவறு செய்துவிட்டார்....
அவருக்கு தெரியாது
அவரின் பாசத்தை விட
எங்களின் காதல் உயர்வானதென்று....
அவரின் சந்தோசத்துக்காக எங்களின்
சந்தோசம் அடகு வைக்கப்பட்டது
உண்மை புரியாது அவர்க்கு....
அவரின் சிரிப்பில் மறைந்து
உறைந்துள்ளது எங்களின் கண்ணீர்...
என்னவளை தூக்கிவந்திருக்க
என்னால் முடியும்
ஆனால் என்னவள் தன் குடும்பத்தை
இழந்திருப்பாள்
இன்று என்னை மட்டும் தானே
இழந்திருக்கிறாள்....
என்னவள் எனக்கு காதலை மட்டும்
கற்றுகொடுக்கவில்லை
காதலோடு உறவுகளின் பாசத்தை
உணர்த்தினாள் அதனால் தான்
காதல் விட்டு கொடுத்து
என்னவளை விட்டுகொடுத்தேன்...
என்னை புரியும் போது கூட
என்னவளின் காதல் அழகாய்
தெரிந்தது அவளின் காதலின் ஆழம் தெரிந்தது....
பாசம் பெரிதா...???....
காதல் பெரிதா...???....
பாசம் பெரிதுதான் காதலிக்கும் வரை
காதல் பெரிதுதான் பாசம் புரியாத வரை.....
இரண்டையும் புரிந்ததால் நான்
அவளை விட்டுகொடுத்தேன்
இரண்டு மனங்களின் காதல்
இறந்திருக்கலாம்
ஆனால் பல மனங்கள்
சந்தோசமடைதது எங்களின் பிரிவால்....
என் காதல் கதையில்
கதாநாயகி பிரிந்திருக்கலாம் ஆனால்
காதல் பிரியவில்லை ஆதலால் காதலிக்கிறேன்....
இன்னமும் காதலிக்கிறேன் என்னவளை
காதலியாக மட்டும்
கண்களுக்கு புரிந்துவிட்டது
மனதுக்கு இன்னும் புரியவில்லை
ஆதலால் காதலிக்கிறேன்.....