படுத்திருக்கும் கவிதை
நான் செத்துப்போனவன்
இத்துப்போயிற்று என் இருதயம்
ஆனால்
நீ இருந்துபோன ஓரம் மட்டும்
பனித்துளிகளை உடுத்துக்கொண்டு
குப்புறப் படுக்கிறேன் உன் நினைவில்
இப்போது நீ இல்லாத இதயத்தில்
உன் நினைவு சூடாகும் நேரமிது
நீ முத்தமிட்ட கன்னங்கள் நிலாக்காயும் நேரமிது
ஏன் உன் வாய்க்குள்
மௌனத்தை சுறுட்டிவைத்திருக்கின்றாய்
என்னோடு எவ்வளவோ பேசியிருக்கின்றாய்
நான் சொல்லித்தான்?
என் கைகளை உடைத்தெறி
கவிதை எழுத மாட்டேன்
என் கால்களை வெட்டியெறி
உன் வீட்டு வாசலுக்கு வரவேமாட்டேன்
என் கண்களை தோண்டியெடு
உன்னைப் பார்க்கவேமாட்டேன்
ஆனால் என் உயிர்....
உன் மௌனத்தின் ஓரத்தால் பதுங்கி வரும்
உன் முறட்டுக் கோபத்தின் சுவர்வழியாக எட்டிப் பார்க்கும்