என் சுவாசம்

பூவே ....சோகத்தின் காரணமென்ன ....
நீ தலை சாய்ந்து கிடப்பதென்ன.....????

தலை நிமிர்ந்து சொல்கிறேன் ....
தரணியெங்கும் சொல்லுகிறேன் ...
உனக்கும் என் மீது காதல் என்பதால் சொல்கிறேன்..
எனக்கும் மனம் உண்டு கேள் மனிதா ...

பனித்துளி என்னை காதலிக்கிறது ...
வெயில் என்னை காதலிக்கிறது...
மழை என்னை காதலிக்கிறது ...
மகளிரும் என்னை காதலிக்கின்றனர் ...

வண்டுகள் என்னை காதலிக்கின்றன ..
வானம் என்னை கதலிக்கின்றது ...
காதல் வசப்பட்டவர் காதலிக்கின்றனர் ...
கவிதை பாடுபவர் காதலிக்கின்றனர் .....

நிலவு என்னை கதலிக்கின்றது....
சூரியன் என்னை கதலிக்கின்றது....
சித்திரையும் என்னை கதலிக்கின்றது ..
சிற்ப்பங்களும் என்னை கதலிக்கின்றது...

காதலிப்பது தவறு என்கிறாயா....
தவறாக நினைக்கிறாயா....

யாரும் என்னை காதலிக்கலாம் ...
என் மனது யாரை காதலிக்கிறது என்று தெரியாமலே....
எனக்குள் இருப்பவரை மட்டும் தான் நான் காதலிக்க முடியும்....
யாரிடமும் சொல்லாமலே...

யார் என்று சொல்வாயா...பூவே
இல்லை மௌனம் காத்து கொள்வாயா....

மௌனம் எனக்கெதற்கு....
என் மனதை சொல்வதற்கு .........

அவர் வருவது தெரியாது.....
என்னை தொடுவது தெரியாது...
அவரால் வீசும் என் வாசம் .....
என்னை தாலாட்டும் அவரின் நேசம் ...
தென்றல் என்றும் என் சுவாசம் ................

பூக்களுக்கும் காதல் உண்டு ....
புன்னகைக்கும் அர்த்தம் உண்டு .....
காதல்லிப்பவருக்கு தெரிவது உண்டு ...
கற்பனை காதலாகாது என்று.....

எழுதியவர் : சாமுவேல்... (22-Nov-13, 1:39 pm)
சேர்த்தது : சாமுவேல்
Tanglish : en suvaasam
பார்வை : 84

மேலே