இவற்றை பேசுவதற்கு பேசாமல் இருப்பதே நலம் oதாரகைo

*******************பொய்***************

செய்யாத ஒன்றை செய்ததாய் சொல்லி
பொய்யாக பேசுதல் பெருமையோ - மெய்யாக
வீரம் யாதெனில் வாய்மையே ஆதலால்
தீரம் வேண்டும் நெஞ்சத்து!

*******************புறம்******************

இறந்த சகோதரனின் இறைச்சியை உண்பதை
மறந்தும் விரும்புமோ மனம் - புறமும்
புன்சொல்லும் கொடும் புன்மதியே வாழ்வின்
இன்பம் அகற்றும் இவை!

********************சாபம்****************

பொறுமையை இழந்து பொங்கும் கோபத்தால்
சிறுமைபுத்தியால் சிதறும் சாபத்தால் - அருமை
வாழ்வது அழிவில் வாடுமே பொருந்தாசாபம்
தாழ்வில் செலுத்தும் உனை!

********************அவதூறு************

கண்ணாலே காணாததை கண்டதாய் கதைகட்டி
புண்படும் வார்த்தைகள் பேசாதே - தன்னாலே
அனுமானித்து பேசுதல் அவதூறே தவிர்ப்போம்
கணித்தலை பிறர்நலம் நாடி!
............................................................................................

எழுதியவர் : தாரகை (23-Nov-13, 11:33 am)
பார்வை : 316

மேலே