பனிக்காடு

பனிக்காட்டை
சுமந்து வரும்
மலையென
மழையில் அவள்.....

மனமெங்கும்
சுமந்து
கிறங்க வைத்தது
புது பனிக்காடு....

ஒரு
தியானம் தவறி
தீ தந்த பொழுதோ,
தேகம் நனைந்த
தேவதையின் வருகை......

சிந்தனை முழுதும்
சித்திர சோலை...
பட்டுத் தெறித்த
மழைத்துளி உடைத்தால்
மங்கையின் மௌனம்
பனிக்காடாய் உருளும்.....

பனிக்காடு
மறைய மறைய
அது,
மழை நின்ற பொழுதாய்
குறைய குறைய
காலடியில் மீந்திருந்தது,
எனக்கான பதில்களும்
நான் மட்டும் உணரும்
பனிக்காடும் ....

எழுதியவர் : கவிஜி (23-Nov-13, 12:51 pm)
பார்வை : 93

மேலே