தாகம்
தாகம்.
===========
கடந்துவிட்ட சம்பவங்களையும்
சம்பிரதாயங்களையும் எண்ணியே ...
நாட்களை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக
அனுப்பவேண்டியுள்ளது
அடைந்துகொள்ளவேண்டிய தனக்கனான இலக்கிற்காக
என் கனவுகள் மெய்ப்பட வேண்டும்
உன் கைக்குள் நான் சிறைப்பட வேண்டும்
மஞ்சளுக்கு ஒரு மஞ்சம் வேண்டும்
இமைகளுக்கு விடியும் நேரம்
என் இளமைக்கும் விடியல் வேண்டும்
கனவுகள் கொண்டு இரவுகளை அழகூட்டவேண்டும்
என் பெண்மைக்கு அர்த்தம் வேண்டும்
உன் மென்மைக்குள் கரைந்திட வேண்டும்
என்ன நினைத்து சென்றிருப்பாய்
என்னை பிரிந்து
என்னை என்னித்தான் உன்னை என்னுகின்றேன்
பக்கத்தில் நீ நின்று
என் பசி எல்லாம் தீர்த்திடவேண்டும்
அறிவால் நிறைந்தவனே ! என்னையும் அறிந்து கொள் ...
சத்தமின்றி சண்டையிடு கண்களால்
காயம் இன்றி கொன்றுவிடு மௌனத்தால்
இல்லை
அதற்கு ஒரு புன்னகை போதும் .